கார் மோதி 4 இளைஞர்கள் உயிரிழப்பு.!

Published by
பால முருகன்

கோவை அருகே மரத்தில் கார் மோதி 4 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தடாகம் காவல் எல்லைக்குட்பட்ட ஆனைக்கட்டி கோவை சாலையில் இன்று அதிகாலையில் கார் ஒன்று வேகமாக சென்றுள்ளது, அப்பொழுது வேகமாக சென்ற அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகிலுள்ள மரத்தில் வேகமாக மோதியதில், இதனால் அப்பகுதியில் பயங்கரமான சத்தம் கேட்டது இதனால் அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

மேலும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர், ஆனால் இந்த விபத்தில் 4 இளைஞர்கள் உயிரிழந்தனர், மேலும் ஒருவர படுகாயம் அடைந்துள்ளார்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்,விசாரணையில் தெரிய வந்தது கோவை மாவட்டம் சீரநாயக்கன், மற்றும் பாளையத்தைச் சேர்ந்த இந்தரேஷ் மற்றும் பூமார்க்கெட்டைச் சேர்ந்த கார்த்திக் வடகோவையைச் சேர்ந்த மணிகண்டன் இவர்கள் நான்கு பெரும் உயிரிழந்துள்ளனர், மேலும் படுகாயம் அடைந்தவர் வடவள்ளியைச் சேர்ந்த மோகன்ஹரி எனவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் காவல்துறையினர் விசாரணையில் மேற்கண்ட 5 பேரும் நண்பர்கள் எனவும் கவுண்டம்பாளையத்தில் நடந்த நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்று விட்டு காரில் அவர்களது வீடு திரும்பும் போது காரை கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி உயிரிழந்ததும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் மேலும், இவர்கள் ஐந்து பேரும் மது போதையில் இருந்திருக்கலாம் என்றும் காவல் துறையினர் கூறுகின்றனர்ம், மேலும் காரை இந்தரேஷ் ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Published by
பால முருகன்

Recent Posts

பல்வேறு திட்டங்களை திறந்து வைக்க இன்று நெல்லை செல்கிறார் மு.க.ஸ்டாலின்.!

பல்வேறு திட்டங்களை திறந்து வைக்க இன்று நெல்லை செல்கிறார் மு.க.ஸ்டாலின்.!

நெல்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று திருநெல்வேலிக்கு செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்…

11 minutes ago

டெல்லியில் வெற்றி பெறுமா பாஜக? வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு!

டெல்லி :  மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…

11 hours ago

INDvENG : அணியை அறிவித்த இங்கிலாந்து! 15 மாதங்களுக்கு பிறகு களமிறங்கும் ஜோ ரூட்!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…

12 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!

டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…

13 hours ago

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை : “இக்கொடுரமானச் செயலுக்கு திமுக தான் பொறுப்பு” – இபிஎஸ் காட்டம்!

கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…

14 hours ago

பழைய ‘கிங்’ கோலியாக மீண்டு(ம்) வாங்க., ஐடியா கொடுத்த அஸ்வின்!

நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…

15 hours ago