கார் மோதி 4 இளைஞர்கள் உயிரிழப்பு.!

கோவை அருகே மரத்தில் கார் மோதி 4 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் தடாகம் காவல் எல்லைக்குட்பட்ட ஆனைக்கட்டி கோவை சாலையில் இன்று அதிகாலையில் கார் ஒன்று வேகமாக சென்றுள்ளது, அப்பொழுது வேகமாக சென்ற அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகிலுள்ள மரத்தில் வேகமாக மோதியதில், இதனால் அப்பகுதியில் பயங்கரமான சத்தம் கேட்டது இதனால் அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
மேலும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர், ஆனால் இந்த விபத்தில் 4 இளைஞர்கள் உயிரிழந்தனர், மேலும் ஒருவர படுகாயம் அடைந்துள்ளார்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்,விசாரணையில் தெரிய வந்தது கோவை மாவட்டம் சீரநாயக்கன், மற்றும் பாளையத்தைச் சேர்ந்த இந்தரேஷ் மற்றும் பூமார்க்கெட்டைச் சேர்ந்த கார்த்திக் வடகோவையைச் சேர்ந்த மணிகண்டன் இவர்கள் நான்கு பெரும் உயிரிழந்துள்ளனர், மேலும் படுகாயம் அடைந்தவர் வடவள்ளியைச் சேர்ந்த மோகன்ஹரி எனவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் காவல்துறையினர் விசாரணையில் மேற்கண்ட 5 பேரும் நண்பர்கள் எனவும் கவுண்டம்பாளையத்தில் நடந்த நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்று விட்டு காரில் அவர்களது வீடு திரும்பும் போது காரை கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி உயிரிழந்ததும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் மேலும், இவர்கள் ஐந்து பேரும் மது போதையில் இருந்திருக்கலாம் என்றும் காவல் துறையினர் கூறுகின்றனர்ம், மேலும் காரை இந்தரேஷ் ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. இதுதொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025