4 வயது சிறுமி பாலியல் கொலை – முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவி கைது

Default Image

சென்னை ஆவடியில் நான்கு வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் 4 வயதே ஆன சிறுமி தன் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நிலையில் தனியாக அவரது இல்லத்தில் இருந்துள்ளார். அவரது இல்லத்திற்கு பின்புறம் உள்ள இல்லத்தில் வசித்து வருபவர் மீனாட்சி சுந்தரம் . ராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற இவர் தன் மனைவியுடன் வசித்து வந்துள்ளார். சிறுமி தனியாக வீட்டில் இருப்பதை அறிந்த அவர் வீட்டில் புகுந்து சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
மேலும் , சிறுமியை தன் வீட்டிற்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில், மயக்கம் அடைந்த அந்த சிறுமி உயிரிழந்துள்ளார். பின்னர், ஒரு மூடையில் சிறுமியின் உடலை கட்டி சிறுமி விட்டு கழிவறையில் வீசியுள்ளார். இந்த கொடூர குற்றத்திற்கு அவரது மனைவி ராஜம்மாளும் துணையாக இருந்து வந்துள்ளார்.
சிறுமியின் வளையலை அடையாளமாக வைத்து குற்றவாளியை கண்டுபிடித்துள்ள காவல் துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், குற்றவாளியை தப்பிக்க காவலர்கள் முயற்சி செய்வதாக கூறி சிறுமியின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்