நான்கு வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த நபரை கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பூர் அருகே போயம்பாளையத்தில் வசிக்கும் ஒரு தம்பதி புதனன்று இரவு வேலை பார்க்கும் இடத்தில் ஓவர்டைம் வேலை பார்க்க சென்றுள்ளனர்.இருவரும் வேலைக்கு சென்ற நிலையில் அவர்களது 4 மற்றும் 6 வயது பெண் குழந்தைகள் இருவரும் வீட்டில் தனிந்தனியாக இருந்துள்ளனர். வேலையை முடித்து வியாழனன்று காலை பெற்றோர் வீடு திரும்பியபோது அதிர்ச்சி காத்திருந்தது தங்களின் 4 வயது குழந்தை அழுது துடித்துள்ளது.
துடித்த பிஞ்சு குழந்தையை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அரங்கேறிய கொடுமை பெற்றோருக்கு தெரியவந்தது. குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது என்று இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசில் புகார் அளித்தனர். ஆனால் இந்த புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமுற்ற குழந்தையின் பெற்றோர் மற்றும் போயம்பாளையம் பகுதி மக்கள் திருப்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில் மாலை வரை குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஏன் விசாரணையைக் கூட தொடங்கவில்லை என்று அவர்கள் வேதனையோடு குற்றம்சாட்டினர். இந்த தகவலறிந்து வந்த போலீசார் அவர்களை சமாதனப்படுத்தினர்.சமாதனப்படுத்தும் போலீஸ் சம்பந்தபட்டவரை கண்டுபிடித்திருந்தால் ஏன் மக்கள் வீதியில் வந்து போராடவேண்டும்,போலீஸ் எதற்கு சமாதனப்படுத்த வேண்டும் உங்களின் கேள்விக்கே விடுகிறேன்.
DINASUVADU
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…