விஷவாயு தாக்கி 4 பேர் பலி.! தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.!
கரூரில் 4 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலர், டிஜிபி ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என கூறி தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கரூர் மாவட்டம் சுக்காலியூர், காந்தி நகர் பகுதியில் குணசேகரன் என்ற வழக்கறிஞர் வீடு கட்டி வந்துள்ளார். அப்போது செப்டிக் டேங்க் கட்டி முடிக்கப்பட்டு , செப்டிக் டேங்க் உள்ளே இருக்கும் சவுக்கு காம்புகளை அவிழ்க முற்பட்ட உள்ளே இறங்கியபோது 4 தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தொழிலாளர்கள் உயிரிழந்தது தொடர்பாக தமிழக தலைமை செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, கரூர் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் 6 வாரத்திற்குள் பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரே கரூர் மாநகராட்சி ஆணையர் சம்பந்தப்பட்ட கட்டடத்தை 15 நாட்களுக்குள் இடிக்க உத்தரவு பிறப்பித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.