4 தொகுதி இடைத்தேர்தல்: பரிசுப்பெட்டகம் சின்னம் கோரி தினகரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
4 தொகுதி இடைத்தேர்தலுக்கு பரிசுப்பெட்டகம் சின்னம் கோரி டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தொகுதி தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியது.
அதேபோல் தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை கட்சியாக பதிவு செய்துள்ளார் தினகரன்.
நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் 4 தொகுதி இடைத்தேர்தலுக்கு பரிசுப்பெட்டகம் சின்னம் கோரி டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.