அடுத்தடுத்து மோதிய 4 வாகனங்கள் – 20-க்கும் மேற்பட்டோர் காயம் …!
சென்னை பூந்தமல்லி அருகே நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்டதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம்
சென்னை பூந்தமல்லி அருகே நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்டதில் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சிறிய சரக்கு வாகனம் திடீரென்று பிரேக் போட்டதில் பின்னால் வந்த நான்கு வாகனங்களும் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
நான்கு வாகனங்கள் மோதலை தொடர்ந்து சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் போக்குவரத்து அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றன.