தமிழகத்தில் 4 கோவில்களில் ஆக்கிரமிப்புகளில் உள்ளது என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
கோயில்களின் ஆக்கிரமிப்பு குறித்து எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் 1097 புராதன இடங்கள் மத்திய அரசால் நினைவுச்சின்னங்கள் மற்றும் பாதுகாக்கப்பட்ட இடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆந்திரப் பிரதேசம் (135), கர்நாடகா (506), கேரளா (29), புதுச்சேரி-யுடி (07), தமிழ்நாடு (412) மற்றும் தெலுங்கானா (08) ஆகிய 1097 இடங்கள் உள்ளது. இவற்றில் 448 கோவில்கள் உள்ளது.
இதில் தமிழகத்தில் 412 கோயில்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களாக உள்ள நிலையில், காஞ்சிபுரம் மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில், காஞ்சிபுரத்தின் தென்னேரி ஆபத்சஹோயேஸ்வரர் கோவில், திருச்சி எரும்பீஸ்வரர் சுவாமி கோவில், தஞ்சாவூரில் உள்ள ஐராதீஸ்வரர் கோவில் ஆகியவை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளது. சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் உடனடியாக ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற நோட்டீஸ் பிறப்பித்தும், இடித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…