பழனியில் 4 ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி….!

பழனியில் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நான்கு ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வந்த நிலையில், தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழகத்தில் கொரொனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் தமிழகத்தில் தொற்று குறைந்துள்ளதை அடுத்து,மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பதாக ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் உட்பட 60 பேருக்கும் 64 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனையில் நான்கு ஆசிரியர்கள் மற்றும் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025