4 மாணவர்கள் பலி – மாணவியின் தந்தையின் காலில் விழுந்து மன்னிப்பு கோரிய ஆசிரியர்..!

Default Image

ஆற்றில் மூழ்கி இறந்த  மாணவி தமிழரசியின் தந்தை ராஜ்குமார் காலில் விழுந்து உதவி தலைமை ஆசிரியர் பரிமளா மன்னிப்பு கோரினார்.

கடந்த 15-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் பிலிப்பட்டி ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப் பள்ளியிலிருந்து 4 மாணவிகள் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற நிலையில் ஆற்றில் மூழ்கி  உயிரிழந்தனர்.

Rajasthan Twins Dead
 மாணவிகள் விளையாட்டுப்போட்டிக்காக திருச்சிக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் போட்டியை முடித்து விட்டு சென்ற போது, போது இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து, மாணவிகளை அழைத்து சென்ற நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் இருவரையும் கல்வித்துறை அரசு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

இந்த நிலையில், அப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 4 நாட்களுக்கு பின் பள்ளி திறக்கப்பட்டது. இதனையடுத்து, உயிரிழந்த மாணவிகளுக்காக 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தபட்டது.

இந்த நிலையில், ஆற்றில் மூழ்கி இறந்த  மாணவி தமிழரசியின் தந்தை ராஜ்குமார் காலில் விழுந்து உதவி தலைமை ஆசிரியர் பரிமளா மன்னிப்பு கோரியுள்ளார். இதனையடுத்து,ராஜ்குமார் மகள் இறப்பு சான்று கூட  வழங்காத நிலையில் பள்ளியை ஏன் திறந்தீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்