சேலம், கடலூர் மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் வட்டம், கன்னங்குறிச்சி தாமரைநகர் என்ற இடத்திலுள்ள புது ஏரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னங்குறிச்சி கிராமம், கோவிந்தசாமி காலனியைச் சேர்ந்த பிரசாந்த் , பாலாஜி இரண்டு மாணவர்களும் குளிக்கச் சென்றார்கள். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
அதைபோல், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், வி.குமாரமங்கலம் கிராமம் பெரியகாலனியைச் சேர்ந்த தினேஷ். மற்றும் இன்பரசன் ஆகிய இருவரும் 23 -ஆம் தேதி காலை அதே கிராமத்திலுள்ள ஏரியில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் . இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சேலம், கடலூர் மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில் ” ஏரியில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினையும் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, எனது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் 2 மாவட்டங்களுக்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர்…
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…