4 மாநில தேர்தல்- வாழ்த்து தெரிவித்த முதல்வர் மு.க ஸ்டாலின்..!
சமீபத்தில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. இதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் முடிவுகள் இன்றும், மிசோரமில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.
ஐந்து மாநிலங்களின் முடிவுகள் ஒரே நாளில் இன்று வெளியிடப்பட இருந்த நிலையில், மிசோரம் தேர்தல் முடிவுகளை மட்டும் டிசம்பர் 4-ம் தேதி (நாளை) அறிவிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தற்போது வரை மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், 4 மாநில தேர்தலில் வெற்றி பெற்றுள்ள கட்சிகளுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் ட்விட்டர் பக்கத்தில் ” தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துகள். அனைத்து தரப்பு மக்களும் நலமுடன் திகழ வளர்ச்சியை முன்னெடுக்கும் நல்லதொரு மாற்றமாக செயல்பட வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
Congratulations to the winning parties in the state legislative elections of #Telangana, #MadhyaPradesh, #Chhattisgarh, and #Rajasthan!
Wishing them a term filled with positive change, progress, and prosperity for people from all sections.#ElectionResults
— M.K.Stalin (@mkstalin) December 3, 2023