பாலமேடு ஜல்லிக்கட்டில் 4 சுற்றுகள் நிறைவு – முதலிடம் யார்..?
மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியின் 4-வது சுற்று முடிவில், 16 காளைகளைப் பிடித்து மணி முதல் இடம் பிடித்துள்ளார்.
மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 4 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது.
16 காளைகளைப் பிடித்து மணி முதல் இடத்திலும், 11 காளைகளைப் பிடித்த ராஜா இரண்டாவது இடத்திலும், 9 காளைகள் பிடித்த அரவிந்த் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார்.