4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு
4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது. அதேபோல் அடுத்த மாதம் 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதேபோல் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யுமாறு தேமுதிக தொண்டர்களுக்கு விஜயகாந்த வேண்டுகோள் விடுத்துள்ளார்.