செங்கல்பட்டில் கோர விபத்து.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்.! 4 பேர் பலி.!

சென்னை : மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பழமத்தூர் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கிரானைட் கற்களை ஏற்றி சென்று கொண்டிருந்த லாரி பழுதாகி நின்றது. இதன் காரணமாக பின்பே வந்த ஆம்னி பேருந்து ஒன்று லாரி மீது மோதியதால் அதிகாலை கோர விபத்து ஏற்பட்டது.
லாரி மீது ஆம்னி பேருந்து மோதியதால் பின் புறம் வந்த அரசு பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்னி பேருந்தின் முன்புறம் பாதியாக நொறுங்கியது. மேலும், இந்த விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 2 பெண்கள் , 2 ஆண்கள் மொத்தம் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்த 4 பேரில் 3 பேர் சென்னை கொடுங்கையூர் சேர்ந்த தனலட்சுமி என்றும், அகிலி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ், பிரவீன் என்றும், தெரியவந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 20 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து காவல்துறையினருக்கும், ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை செய்தும் வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025