சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 சீனர்கள் உட்பட 4 பேருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.சீனா மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது.இதனால் உலகின் பிற நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்கத்தால் 811 பேர் உயிரிழந்த்துள்ளனர். கொரோனா வைரசால் 37,000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த வைரஸ் இதுவரை இந்தியாவில் கேரள மாநிலத்தில் 3 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசுகளும்,மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.வைரஸ் அறிகுறிகள் குறித்து வரும் நபர்களுக்கு சோதனை மேற்கொள்ள சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 சீனர்கள் உட்பட 4 பேருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை.4 பேரையும் தனி வார்டில் வைத்து பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்பது உறுதியாகியுள்ளது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனா வைரஸ் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று பதிவிட்டுள்ளார்.
மதுரை : இந்து கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் வீடாக பார்க்கப்படுவது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில்.…
சென்னை : இன்று (பிப்ரவரி 3) மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…
நெதர்லாந்து: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலக சாம்பியனான குகேஷை 2-1 என்ற கணக்கில் டைபிரேக்கரில் வீழ்த்தி கிராண்ட்மாஸ்டர்…
மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய…
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…