இலங்கையை சேர்ந்த 4 பேர் தமிழகத்தில் தஞ்சம்..!
பொருளாதார நெருக்கடி காரணமாக மேலும் 4 பேர் இலங்கையில் இருந்து தமிழகம் வந்துள்ளனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வரும் நிலையில் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களில் இறங்கி உள்ளனர். அங்கு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இந்த நிலையில் அங்கு வாழ இயலாத சூழலால் இலங்கையிலிருந்து தமிழகம் நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே, 100-க்கும் மேற்பட்டோர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், மேலும் 4 பேர் இலங்கையில் இருந்து தமிழகம் வந்துள்ளனர். இவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.