திருச்சி : வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு!

death

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் அருகே இருக்கும் ரயில் நகர் பகுதியில் இருந்த ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1970 ஆண்டு காலகட்டத்தில் கட்டப்பட்ட அந்த வீடு நேற்று இரவு மேற்கூரை இடிந்து விழுந்து துயரசம்பவம் ஏற்பட்டது.

இந்த வீட்டின் உரிமையாளர் ஆட்டோ ஓட்டுநர் மாரிமுத்து என்பவர். இவர் தன்னுடைய தயார், மனைவி, குழந்தைகள் ஆகியோருடன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு மாரிமுத்தின் மனைவி, தயார், 2 குழந்தைகள் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த நிலையில், திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

புதுக்கோட்டை விபத்து! நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இதில் மாரிமுத்தின் மனைவி, தயார், 2 குழந்தைகள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்கள். நேற்று இரவு புத்தாண்டை முன்னிட்டு அந்த பகுதியில் வெடி வெடிக்கப்பட்டு கொண்டு இருந்த காரணத்தால் இவர்களுடைய வீடு மேற்கூரை இடிந்து விழுந்த சத்தம் வெளியே கேட்கவில்லை.

பிறகு நேரம் கழித்து அக்கம் பக்கத்தினர் வீடு இடிந்து விழுந்ததை பார்த்த மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவலை கொடுத்தனர். பிறகு உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற அவர்கள் இடிந்து விழுந்த கட்டட இடிபாடுகளை அகற்றி சிக்கி இருந்த உடல்களை மீட்டனர். புத்தாண்டை முன்னிட்டு இப்படியான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
mk stalin - RN RAVI
TVK Leader Vijay
Supreme court of India - TN Governor RN Ravi
Pawan Kalyan
US President - China President
murder