” 4 பேருக்கு கூஜா தூக்க முடியாது ” பாமகவில் இருந்து விலகிய நடிகர்…!!
வருகின்ற மக்களவை தேர்தலில் அதிமுக , பாஜக கூட்டணியில் பாமக இணைந்தது.இது பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிருப்தி ஏற்படுத்தியது. இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் துணை தலைவர் நடிகர் ரஞ்சித் நான் பாமகவில் இருந்து விலகுகின்றேன் என்று தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில் 8_வழி சாலை என எத்தனை போராட்டங்கள் மக்கள் நடத்தினார்கள் இதை அவர்கள் நினைத்து பார்க்கவில்லை . 4 பேருக்கு என்னால் கூஜா தொக்க முடியாது என்று அவர் தெரிவித்தார் என்று கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.