பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தமிழகம் வருகை.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால், பலர் தங்களது வயிற்று பசியை போக்க கூட இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பொருளாதார நெருக்கடியை தாங்க இயலாமல், மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராகவும் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர். இதற்கிடையில், இலங்கையில் இருந்து தமிழர்களும் அகதிகளாக தமிழகம் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கை புங்குடுதீவு பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தனுஷ்கோடி வந்துள்ளனர். இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் புங்குடுதீவு குறிகட்டுவான் சாலை பகுதியை சேர்ந்த ஜெய பரமேஸ்வரன் (44), இவரது மனைவி மாலினி தேவி (42), மகள் தமிழினி (12), மகன் மாதவன் (7) ஆகியோர் இலங்கை தலைமன்னாரில் இருந்து படகு மூலம் தமிழகம் வந்துள்ளனர்.
இதனையடுத்து, நால்வரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட நிலையில், மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…