திருச்சியை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் (தொழிலாலதிபர்), கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி கொலை செய்யப்பட்டார். அதிகாலை வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதுதொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் சி.பி.ஐ. வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக விசாரணை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கொலையாளிகளை உடனே கண்டுபிடிக்க வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இதையடுத்து, நீதிமன்றம் உத்தரவின்பேரில் ராமஜெயம் கொலை வழக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சிறப்பு குழு கடந்த ஒரு வருடமாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக ராமஜெயம் கொலை வழக்கில் பயனுள்ள துப்பு தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். இதன்பின், கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. அந்தவகையில், திருச்சியில் ராமஜெயம் கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகவிருந்த ரவுடி பிரபு என்ற பிரபாகரன் என்பவரை 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட வந்த நிலையில், திருச்சியில் வள்ளுவன் நகரை சேர்ந்தவர் பிரபு என்கின்ற பிரபாகரன் நான்கு பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டு உள்ளார். ராமஜெயம் கொலை வழக்கில் கடந்த சனிக்கிழமைதான் பிரபாகரனிடம் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தன. இந்த சூழலில் நாளை மீண்டும் இந்த விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட பிரபாகரன் ரவுடி என்றும் அவர் மீது ஏற்கனவே உள்ள வேறு சில கொலை வழக்குகளில் சிறை சென்றவர் என கூறப்படுகிறது. இதனால் இவரின் கொலைக்கு பின் வேறு கும்பல் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், ராமஜெயம் கொலை வழக்கில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில், கொலை செய்யப்பட்டுள்ளது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பிரபாகரன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் சிறப்பு புலனாய்வு குழு விசரனை நடத்த முடிவுசெய்துள்ளது. வெர்ஷா காரை பற்றி பிரபாகரனிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்றிரவு படுகொலை செய்யப்பட்டார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…