இன்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர், துறை செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு நல சங்கங்கள், அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் விளையாட்டு தொடர்பான தகவல்களை பெற்றிடவும், குறைகள் தெரிவித்திடவும் தகவல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறையினை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அனைத்து சட்டமன்ற தொகுதி வாரியாக ஒரு விளையாட்டு அரங்கம் அமைக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைத்திட முற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…