நிவர் புயல் கரையை கடக்க மேலும் 4 மணிநேரம் ஆகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி வடக்கே பலத்த சூறைக்காற்றுடன் மையப்பகுதியை கடந்து வருகிறது. புதுச்சேரி 20 கி.மீ.., சென்னைக்கு 100 கி.மீ தொலைவில் புயலானது கரையை கடந்து வருகிறது. புயல் கரையை கடந்து வருவதால் கடலோர பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், புயல் கரையை கடக்க மேலும் 3 முதல் 4 மணிநேரம் ஆகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் நேரம் தொடர்ந்து மாற்றமடைந்து வருகிறது. புயல் கரையை கடக்கும் எதிர்திசையில் காற்று வீசுவதால், நிவர் புயல் முழுவதும் கரையை கடக்க தாமதம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரம் இடியுடன் கூடிய தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், அரியலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், காரைக்கால், திருச்சி, திருப்பத்தூரில் அடுத்த 3 மணிநேரம் மிதமான மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…