மக்கள் நீதி மய்யத்துக்கு மேலும் 4 பொதுச்செயலாளர்கள் -தலைவர் கமல்ஹாசன் உத்தரவு

மக்கள் நீதி மய்யத்துக்கு மேலும் 4 பொதுச்செயலாளர்களை நியமித்து கட்சி தலைவர் கமல்ஹாசன் உத்தரவு பிறப்பித்துள்ளார் .
கமல்ஹாசன் 2018 ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்ற மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் என கமல்ஹாசன் அறிவித்தார்.பின் இடைத்தேர்தலிலும் போட்டியிடும் என்றும் அறிவித்தார் .மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு “டார்ச் லைட்” சின்னமாக ஒதுக்கப்பட்டது.ஆனால் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டு தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்துக்கு மேலும் 4 பொதுச்செயலாளர்களை நியமித்து கட்சி தலைவர் கமல்ஹாசன் உத்தரவு பிறப்பித்துள்ளார் .அவரது உத்தரவில் பொதுச்செயலாளர்களாக ஏஜி.மௌர்யா, வி.உமாதேவி, ஆர்.ரங்கராஜன், பஷீர் அகமது நியமனம் செய்யப்பட்டுள்ளனர் ஏற்கனவே அருணாச்சலம் பொதுச்செயலாளராக உள்ள நிலையில் மேலும் 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025