சென்னையில் கூடுதலாக 4 பேருந்து நிலையம்…!

சென்னையில் நான்கு இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னையிலிருந்து நவம்பர் 1-ஆம் தேதியிலிருந்து 3-ஆம் தேதி வரை மக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக நான்கு இடங்களில் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் கோயம்பேடு தவிர மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் கூடுதல் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
கோயம்பேட்டிலிருந்து மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லிக்கு 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாம் தேதி முதல் மூன்றாம் தேதி வரை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் மொத்தமாக 10,240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதில் சென்னையிலிருந்து 3,506 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மற்ற இடங்களிலிருந்து 6,734 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
1-ம் தேதியிலிருந்து 3ஆம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை 6,300 பேருந்துகள். அவற்றில் தினமும் 2,100 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.