கடந்த 2018 -ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் கும்பகோணத்தில் தனியார் வங்கியின் பயிற்சிக்காக வந்துள்ளார். அவர் இரவு நேரத்தில் கும்பகோணம் ரயில்வே நிலையத்திற்க்கு வந்ததால் ஆட்டோ மூலம் பெண்கள் விடுதிக்கு செல்ல அவர் முடிவு செய்தார்.
அதனால் விடுதிக்கு செல்ல ஆட்டோ ஒன்றை அழைத்து உள்ளார். அப்போது குருமூர்த்தி என்ற ஆட்டோ டிரைவர் அப்பெண்ணை ஆட்டோவில் அழைத்துக்கொண்டு கும்பகோணத்தை சுற்றி சுற்றி வந்துள்ளார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தால் அப்பெண் தனது தோழியிடம் போன் செய்து ரயில்வே நிலையத்தில் இருந்து விடுதிக்கு எவ்வளவு தூரம் என கேட்டுள்ளார்.
உடனே அப்பெண் ரயில்வே நிலையத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர்தான் என கூறியுள்ளார். இதை தொடர்ந்து ஆட்டோ டிரைவரிடம் இதைப்பற்றி அப்பெண் கூறியுள்ளார் உடனே ஆட்டோ டிரைவர் அப்பெண்ணை கீழே இறக்கி விட்டு சென்று விட்டார். இரவு நேரம் என்பதால் அங்கு வந்த இரண்டு பேரிடம் அந்தப் பெண் விடுதியை பற்றி விசாரித்துள்ளார்.
அந்த இருவரும் குடிபோதையில் இருந்ததால் அப்பெண்ணை பலவந்தமாக தூக்கிக் கொண்டு சென்று வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அவர்கள் மட்டுமில்லாமல் அவருடன் சேர்ந்து மற்றோரு இரண்டு பேரும் சேர்ந்து நான்கு பேரும் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த வழக்கு தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் , அப்பெண்ணை வன்கொடுமை செய்த தினேஷ் , புருஷோத்தமன், வசந்த் ,மற்றும் அன்பரசன் ஆகிய நான்கு பேருக்கும் ஆயுள் முழுவதும் சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி எழிலரசி உத்தரவிட்டார்.மேலும் ஆட்டோ ஓட்டுநர் குருமூர்த்திக்கு 7 ஆண்டு சிறை என மகளிர் தஞ்சை மகளிர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…