ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு..! கொலையா? தற்கொலையா?

Default Image

திண்டுக்கல்லில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு.

திண்டுக்கல் மாவட்டம் பழனி வத்தகவுண்டன் வலசுவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த முருகேசன், மனைவி வளர்மதி, மகள் சிவரஞ்சனி, மகன் கார்த்திக் ஆகிய 4 பேரும் வைக்கோல் குவிக்கப்பட்டிருந்த இடத்தில், கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் போலீசார் விவசாயி முருகேசன் குடும்பத்துடன் கொல்லப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின்பு தான் 4 பேரும் எப்படி இறந்தனர் என்பது பற்றி தகவல் கிடைக்கும் என திண்டுக்கல் எஸ்.பி சீனிவாசன் அவர்கள் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்