பா.ஜ.க.வின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் செய்ய 4 மெகாஸ்கிரீன் வாகனங்கள் தயார்
- அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ஜ.க.விற்கு 5 தொகுதிகள் அ.தி.மு.க ஒதுக்கியது.
- சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பா.ஜ.க.வின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் செய்வதற்காக 4 மெகாஸ்கிரீன் பிரச்சார வாகனங்கள் காரைக்குடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.மக்களவை தேர்தல் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ம் தேதி தொடங்கியது.
அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ஜ.க.விற்கு 5 தொகுதிகள் அ.தி.மு.க ஒதுக்கியது. பா.ஜ.க கட்சியினர் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்காத இருந்த நிலையில் நேற்று 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் களின் பட்டியலை தமிழக பா.ஜ.க தலைமை வெளியிடாமல் தன்னிச்சையாக ஹெச்.ராஜா வெளியிட்டார்.
இந்நிலையில் சிவகங்கை தொகுதி பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பா.ஜ.க.வின் சாதனைகளை விளக்கி பிரச்சாரம் செய்வதற்காக 4 மெகாஸ்கிரீன் பிரச்சார வாகனங்கள் காரைக்குடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.