அதிமுக ஆட்சியில் 4 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபத்தில் பாஜக தலைவர் முருகன் தடுப்பூசி பற்றாக்குறைக்குக் காரணம் குறித்துப் பேசும்போது எவ்வளவு போடப்பட்டுள்ளன, எவ்வளவு இருப்பு உள்ளது, மாவட்டங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டவை எவ்வளவு என்பதை வெள்ளை அறிக்கை வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இன்று சென்னை கிண்டியில் உள்ள டோக்கியோ தமிழ் சங்கம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட ஆக்சிஜன் செரியூட்டிகளை அமைச்சர் சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். அப்போது பேசிய, அமைச்சர் சுப்பிரமணியன்
கடந்த ஜனவரி 16 அன்றிலிருந்து திமுக ஆட்சிக்கு வரும் வரை முந்தைய ஆட்சியில் போட்ட தடுப்பூசியில் 3.5 முதல் 4 லட்சம் வரை வீணாகிவிட்டதாக ஆர்டிஐயில் தகவல் பெறப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தபின் வீணானதாகச் சொல்லப்பட்ட 3.5 லட்சம் தடுப்பூசிகளையும் சேர்த்துக் கூடுதலாக 1.75 லட்சம் தடுப்பூசிகள் கூடுதலாக இருக்கும் வகையில் செலுத்தியுள்ளோம்.
இதனால், மருந்து அளவைக் குறைத்துப் போட்டீர்களா என்றால் இல்லை. கூடுதலாக 16% முதல் 24% வரை கூடுதலாக அடைக்கப்படும் மருந்தையும் வீணடிக்காமல் பயன்படுத்தியதால் போடப்பட்டது என தெரிவித்துள்ளார்.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…