சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் 7ஆம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ரவிக்குமார்,அபிஷேக், சுகுமாரன், எரால் பிராஸ், முருகேசன், பரமசிவம், சுரேஷ், ராஜசேகர், தீன தயாளன், குணசேகரன், பாபு, பழனி, ராஜா, சூர்யா, ஜெயகணேஷ், ஜெயராமன், உமாபதி ஆகிய 17 பேர் கைது செய்யப்பட்டனர்.கடந்த 2018 ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் வரை தொடர்ந்து 6 மாதங்கள் இவர்கள் ஒருவர் பின் ஒருவராக அந்த சிறுமியை வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இது தொடர்பாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 6 பேரையும், குற்றத்தை மறைத்ததாக 11 பேரையும் கைது செய்தது போலீசார்.சிறுமியின் தாய் அளித்த புகாரில் போக்ஸோ, கொலை முயற்சி, கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.பின்னர் இவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்,குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும்போதே கைதானவர்களில் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாபு என்பவர் மரணமடைந்தார்.மேலும் 16 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இது தொடர்பாக சென்னை சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு மீதான விசாரணைகள் அனைத்தும் முடிந்த நிலையில்,பிப்ரவரி 1-ஆம் தேதி மரணமடைந்த ஒருவரை தவிர மீதமுள்ள 16 பேர் மீது விசாரணை நடைபெற்றது.அதில்,16 பேரில் 15 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குணசேகரன் தவிர மற்ற 15 பேரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டது. . பின்னர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 15 பேருக்கு என்ன தண்டனை என்பதை 3-ம் தேதி அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று குற்றவாளிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.பின்னர் வழக்கில் 15 பேருக்கும் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தண்டனை விவரங்கள் :
1)ரவிகுமார் (56 ) சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2) சுரேஷ் (32) சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
3) ராஜசேகர் (48) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
4) எரால்பிராஸ் (58) 7ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
5) அபிஷேக் (28) சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
6) சுகுமாரன் (60) 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
7) முருகேசன்(54) 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
8)பரமசிவம் (60) 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
9) ஜெய்கணேஷ் (23) 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
10) பாபு (36) இறந்துவிட்டார்.
11) பழனி (40) சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
12) தீனதயாளன் (50) 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
13) ராஜா (32) 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
14) சூர்யா (23) 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
15) குணசேகரன் (55) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
16) ஜெயராமன் (26) 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
17) உமாபதி (42) 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…
சென்னை : மெட்ரோ நிர்வாகம் தற்போது, இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோஇரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ரூ.3,657.53 கோடி…