சென்னையில் இன்று 4 விமானங்கள் ரத்து!
சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி மற்றும் சீரடிக்கு செல்லும் 4 விமான சேவைகள் ரத்து.
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர், இலங்கை, டாக்கா ஆகிய இடங்களுக்கு செல்லும் 11 விமானங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இன்று பகல் 12 மணிக்கு தூத்துக்குடி செல்லும் விமானம், பிற்பகல் 2.25 மணிக்கு சீரடி செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி மற்றும் சீரடிக்கு செல்லும் 4 விமான சேவைகள் ரத்தாகி உள்ளன.