கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த 4 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக மாநில அரசு பல்வேறு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மீண்டவர்களுக்கு மற்றொரு பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் உருவாகி உள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டவர்களை அதிகம் தாக்கக் கூடிய இந்த பூஞ்சையால் தமிழகத்திலும் பலர் நாளுக்கு நாள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்த கருப்பு பூஞ்சை தொற்று காரணமாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் தற்பொழுது பலியாகியுள்ளனர்.கடலூர் மாவட்டத்திலுள்ள சேத்தியாத்தோப்பு பகுதியை சேர்ந்த 54 வயதுடைய கண்ணன் என்பவர் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்து குணமடைந்த நிலையில், தற்போது அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் இருப்பது கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேபோல 54 வயதுடைய பண்ருட்டி தட்டாஞ்சாவடி சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர், வேம்பூர் ராமநாதபுரத்தை சேர்ந்த 55 வயதுடைய ரவிக்குமார் என்பவர், 45 வயதுடைய சேத்தியாதோப்பு பகுதியை சேர்ந்த மீனா ஆகியோர் கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை தொற்றால் உயிரிழந்துள்ளனர். நான்கு பேர் தொடர்ச்சியாக கடலூர் மாவட்டத்தில் உயிரிழந்துள்ள நிலையில் இது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…