தமிழகத்தில் 4 நாட்கள் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம்!

pm modi

PM Modi: பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள ஏப்ரல் 9ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில், முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மக்களவை தேர்தலையொட்டி, திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் குறிப்பாக தமிழகத்தில் குறிப்பிடத்தக்க இடங்களை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், மக்களவை தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி தமிழகத்தில் 4 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள ஏப்ரல் 9ம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். அதன்படி, ஏப்ரல் 9, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் வாகன பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார்.

அதில், ஏப்ரல் 9ம் தேதி காலை வேலூரில் வாகன பேரணி, மாலை தென்சென்னையில் வாகன பேரணியில் பங்கேற்கிறார்.  ஏப்ரல் 10ம் தேதி நீலகிரியில் வாகன பேரணியும், கோவையில் பொதுகூட்டத்திலும் பங்கேற்கிறார்.  ஏப்ரல் 13ம் தேதி பெரம்பலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ஏப்ரல் 14ம் தேதி விருதுநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்