போலீசாருக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை – கடலூர் எஸ்பி அதிரடி உத்தரவு!
அக். 9ம் தேதி தேர்தல் பணி முடிந்த பின் தொடர்ந்து 4 நாட்கள் போலீசாருக்கு விடுமுறை அளித்த கடலூர் மாவட்ட எஸ்பி.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்கள் அக் மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
அதன்படி, 9 மாவட்டங்களுக்கான முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 6 வரை விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலில் 74.37 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் காவல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. எந்தவித பெரிய அசபாவிதங்கள் இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெற உறுதுணையாக இருந்தார்கள்.
இந்த நிலையில், கடலூரில் இருந்து தேர்தல் பணிக்கு சென்ற போலீசாருக்கு 4 நாள் விடுமுறை அளித்து அம்மாவட்ட எஸ்.பி.சக்தி கணேசன் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. அக் 9ம் தேதி தேர்தல் பணி முடிந்த பின் தொடர்ந்து 4 நாட்கள் போலீசாருக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக எஸ்பி அறிவித்ததுக்கு, கடலூர் மாவட்ட போலீசார் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கடந்த ஜூன் மாதம் தமிழகம் முழுவதும் 27 எஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதில், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக (SP) சக்தி கணேசன் நியமனம் செய்யப்பட்டார். பின்னர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சி.சக்திகணேசன் பொறுப் பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடப்படுகிறது.