தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு 4 நாட்கள் விடுமுறை.!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 4 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை என தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், நவ.16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்க்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து நவ.9ம் தேதி கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 50%-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பிள்ளைகளை திறக்க வேண்டாம் என தெரிவித்தனர்.
இதனையடுத்து, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்படுவதாகவும், பள்ளிகள் திறப்பு தேதி குறித்து, சூழ்நிலைக்கு ஏற்ப பின்னர் அறிவிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அந்த வகையில், ஆன்லைன் வகுப்புகள் வழக்கம் போல் நடைபெற்று வந்த நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி மாணவர்களுக்கு இன்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், மாணவர்கள் இரட்டை சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.