4 நாட்கள் முழு ஊரடங்கு .! முன்யோசனையற்ற நிர்வாகத்தை காட்டுகிறது .!

Default Image

சென்னை ,மதுரை , கோவை உள்ளிட்ட மாநகரங்களில் 4 நாட்கள் முழுமையான ஊரடங்கு என அறிவித்தது முன்யோசனையற்ற நிர்வாகத்தை காட்டுகிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 1,885 -ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள  முதல்கட்ட நடவடிக்கையாக  மத்திய அரசு அறிவித்த  40 நாள் ஊரடங்கை மதித்து, பொதுமக்கள் வீட்டுக்குள் இருந்து வருகிறார்கள். இந்நிலையில், சென்னை ,மதுரை , கோவை உள்ளிட்ட மாநகரங்களில் 4 நாட்கள் முழுமையான ஊரடங்கு என எவ்வித முன் அறிவிப்புகளுமின்றி முதல்வர் பழனிசாமி அறிவித்தது முன்யோசனையற்ற நிர்வாகத்தை காட்டுகிறது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் , முதல்வரின் முன்யோசனையற்ற அறிவிப்பால் மக்கள் பதற்றமடைந்து கடைகளில் குவிந்துவிட்டனர். இதனால்,ஊரடங்கு நோக்கமே சிதைந்து சின்னாபின்னமாகிவிட்டது என ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்