4 நாட்கள் தொடர் விடுமுறை – தனியார் பேருந்துகளில் கட்டண உயர்வு..!
4 நாட்கள் தொடர்விடுமுறையை பயன்படுத்தி வெளியூர் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல்.
தமிழகத்தில் தமிழ் திருநாள், புனித வெள்ளியை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை முன்னிட்டு, வெளியூர் செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், 4 விடுமுறை என்பதால், அதிகமான பயணிகள் பேருந்துகள் பயணிக்கின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தி தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சங்கர் அவர்கள் கூறுகையில், தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.