4 நாட்கள் அரசு முறை பயணம்! தமிழகம் வந்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!
அரசு முறைப் பயணமாக விமானம் மூலம் கோயம்பத்தூர் வந்தடைந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
சென்னை : நீலகிரியில் இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு. இதன் காரணமாகவே 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக இன்று (நவ.27) நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.
இதனால், நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து இன்று காலை விமானம் மூலம் கோயம்பத்தூர் விமான நிலையம் வந்தடைந்த திரௌபதி, ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்த நிலையில் நீலகிரி மலையில் நிலவும் கடும் மேகமூட்டத்தின் காரணமாக கோவையில் இருந்து கார் மூலம் கோத்தகிரி வழியாக ஊட்டிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அவர் ஊட்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் பழங்குடியினப் பெண்களுடன் உரையாடல் நடந்த . மேலும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் அவர் கலந்துகொள்ள இருக்கிறார் எனபது குறிப்பிடத்தக்கது.