கொரோனாவிலிருந்து முழுவதும் மீண்ட 4 தமிழக மாவட்டங்கள்!
கொரோனா வைரஸின் தாக்கத்திலிருந்து தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்கள் முழுவதுமாக விடுபட்டுள்ளது.
தமிழகத்தில், 3023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கிருஷ்ணகிரியை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.தற்பொழுது தமிழகத்தில் 3 மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளது. ஈரோட்டில் 70 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதில் ஒருவர் மட்டும் உயிரிழந்த நிலையில் 69 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் அம்மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது.
நீலகிரியில் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதில் அனைவரும் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். அது போல தூத்துக்குடியில் 27 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு, ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்ற 26 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். எனவே, தூத்துக்குடியும் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது.
இம்மூன்று மாவட்டங்களும் பாதிப்புக்கு பின்பு மீண்டவை. ஆனால், கிருஷ்ணகிரி மாவட்டம் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லாமல், சுகாதாரமான மாவட்டமாக உள்ளது. இதன் படி தமிழகத்தில், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, நாமக்கல் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தற்போது கொரோனா முற்றிலும் இல்லை.