ஆருத்ரா கோல்டு உள்பட 4 நிறுவன மோசடி! 1,115 வங்கி கணக்குகள் முடக்கம்.. பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி பேட்டி!

Default Image

ஆருத்ரா கோல்டுக, ஹிஜாவு உள்ளிட்ட மோசடிகள் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் பேட்டி.

ஆருத்ரா கோல்டு மோசடி:

ஆருத்ரா கோல்டு, ஹிஜாவு உள்ளிட்ட மோசடிகள் தொடர்பாக சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள், ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக 10,000 பேர் புகார் அளித்துள்ளனர்.  இந்த நிறுவனத்தின் 120 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், மோசடி வழக்கில் 2.2 கிலோ தங்கம். 18 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஹிஜாவு மோசடி:

ஹிஜாவு மோசடி வழக்கில் இதுவரை 52 குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 89,000 பேரிடம் பணம் பெற்று ஹிஜாவு நிறுவனம் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஹிஜாவு நிறுவனம் தொடர்பான 162 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனம் தொடர்பான இடங்களில் நடந்த சோதனையில் 3 கோடியே 34 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஐஎஃப்எஸ் நிறுவனம் மோசடி:

ஐஎஃப்எஸ் நிறுவனம் ரூ.6,000 கோடி மோசடி செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ஐஎஃப்எஸ் நிறுவனம் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.121 க்கொடி முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஐஎஃப்எஸ் நிறுவனம் தொடர்பான 791 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவன மோசடி தொடர்பாக நடத்திய சோதனையில் ரூ.1.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், 680 கிராம் தங்கம், 120 கிராம் வெள்ளி, 16 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

எல்ஃபின் நிறுவனம் மோசடி:

எல்ஃபின் நிறுவனம் ரூ.800 கோடி மோசடி செய்துள்ளது கண்டறியப்பட்டு, 2 முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 11,000 முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக புகார் வந்த நிலையில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்ஃபின் நிறுவனத்துக்கு சொந்தமான 42 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. க்ரிப்டோ கரன்சியில் செய்யப்பட்ட முதலீடும் முடக்கப்பட்டுள்ளது என பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்