உள்ளாட்சித் தேர்தலில் 4 வண்ணத்தில் வாக்குச்சீட்டு ! எந்த நிறங்களில் வாக்குச் சீட்டு தெரியுமா?
தமிழகத்தில் டிசம்பர் 27-ஆம் தேதி மற்றும் டிசம்பர் 30 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது .ஆனால் மாநகராட்சி,நகராட்சி ,பேருராட்சி தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் இரண்டுகட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில் வாக்குசீட்டு முறைதான் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இன்று முதல் தேர்தல் நடந்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
குறிப்பாக இந்த தேர்தலுக்கு வாக்குச்சீட்டு முறை பயன்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.அதன்படி பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டுகள் குறித்த விவரத்தை காண்போம். வெள்ளை நிற வாக்குச்சீட்டு கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும்.இளம் சிவப்பு நிற வாக்குச்சீட்டு கிராம ஊராட்சி தலைவர்கள் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும். பச்சை நிறத்திலும் வாக்குச்சீட்டு ஊராட்சி ஒன்றியவார்டு உறுப்பினர் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும். மஞ்சள் நிறத்திலும் வாக்குச்சீட்டு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.