மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.
ஆனால் அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இணைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது .
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார்.ஆனால் அந்த ஆலோசனையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை.அதேபோல் இதற்காக அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் விஜயகாந்தை சந்தித்தார்.ஆனால் ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 6-ஆம் தேதி) சென்னையில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இந்த விழாவின் மேடையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஆனால் தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக மூத்த நிர்வாகிகள் இன்று மீண்டும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து இன்று முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.
அதேபோல் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதேபோல் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட தகவலுக்கு தேமுதிக நிர்வாகிகள் அதிருப்தி என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேண்டாம், வேண்டாம் கூட்டணி வேண்டாம் என கோயம்பேடு தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி : சீனாவில் 14 வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதித்துள்ள HMP வைரஸ் தொற்றானது இந்தியாவிலும் சிலருக்கு உறுதியாகியுள்ளது என தகவல்கள் வெளியாகின.…
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக…
நேபாளம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம்…
சென்னை : வரும் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட்…
சென்னை: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நடிகர் சூர்யாவின் "கங்குவா" திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸிலும்…
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை…