இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் … 4 பேர் கைது..!
மதுரை மாவட்டத்தில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் இவரது தங்கை சிவசக்தி தனது தந்தை சிவசக்தி பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்று விட்டு தனது அண்ணனின்
றாம் ஆண்டு நினைவு அஞ்சலி சுவரொட்டி ஒட்டுவதற்காகவும் அனுப்பானடி பகுதிக்கு கடந்த திங்கட்கிழமை சென்றுள்ளார் . மேலும் இந்த நிலையில் சுவரொட்டிகளை ஒட்டி விட்டு தனது நண்பர்களுடன் முத்துக்குமார் பேசிக் கொண்டிருந்தார் .
மேலும் அப்போது திடீரென அங்கு வந்த கும்பல் கையில் அருவாள் மற்றும் கத்திகளை வைத்து இருந்தனர் வேகமாக விரைந்து வந்து முத்துக்குமாரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிவிட்டு கல்லை தூக்கி போட்டு கொலை செய்து விட்டு தப்பி சென்றனர் . இந்த நிலையில் முத்துக்குமார் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் தொடர்பாக விசாரணையில் கடந்த 2010ஆம் ஆண்டு அவரது சகோதரரும் சேர்ந்து சத்யா என்பவரை முத்துக்குமார் கொலை செய்ததாக கூறப்படுகிறது, சத்யாவை பழிதீர்க்கும் வகையில் அவரது நண்பர்கள் முத்துக்குமாரை கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் சரவணன், செந்தில், சுரேஷ் ,மணிகண்டன் ஆகிய 4 பேர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்