சிம் ஸ்வாப் முறையில் மோசடி – 4 பேர் கைது!
கூகுள் பே மூலம் பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என சென்னை காவல் ஆணையர் தகவல்.
சிம் ஸ்வாப் என்ற முறையில் கூகுள் பே மூலம் பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். வடமாநில கொள்ளை கும்பலை சேர்ந்த 4 பேரை காவல்துறை கைது செய்து சென்னை அழைத்து வரப்பட்டது என்றும் கூறினார்.
அதாவது, மற்றொரு சிம்கார்டு மூலம் செல்போன் எண்களை ஆக்டிவேட் செய்து வங்கி கணக்கு, கூகுள் பே மூலம் கொள்ளையடித்துள்ளதாக கூறினார். மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட ரோஹன், ராகேஷ்குமார் சிங், சயந்தன் முகர்ஜி, ராகுல் ராயிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சிம் ஸ்வாப் மூலம் ரூ.23 லட்சத்தை இழந்த தனியார் மருத்துவமனை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.சிம் ஸ்வாப் மோசடி சம்பவத்தில் தலைமறைவாகவுள்ள முக்கிய நபரை விரைவில் கைது செய்வோம் என்றும் தெரிவித்த அவர், மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர் என்றும் பாராட்டு தெரிவித்தார்.