தூத்துக்குடி மாவட்டத்தில் சூதாடிய 4 பேர் கைது..!!
தூத்துக்குடி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிக் கொண் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று தென்பாகம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொட்டிருந்தார். அப்போது தூத்துக்குடி போல்டன்புரத்தை சேர்ந்த ஜேசுராஜ், திலீப்குமார், மாரிமுத்து செல்சினி காலனியை சேர்ந்த சந்தியாகு, ஆகியோர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது சப்இன்ஸ்பெக்டர் சிவக்குமார் அவர்கள் சூதாட்டம் விளையாடி வந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.