4 தினங்கள் விடுமுறையாக இருப்பதால் நெரிசல் இல்லை…எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!
4 தினங்கள் விடுமுறையாக இருப்பதால் நெரிசல் இல்லாமல் மக்கள் வெளியூர் செல்கின்றனர் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கோயம்பேட்டில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் பேருந்துகள் இயக்கம் பற்றிய ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியார்களிடம் கூறியதாவது:
உரிய அனுமதியில்லாமல் சென்ற 4 தனியார் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அரசு பேருந்துகளில் மக்கள் அதிகம் பயணம் செய்கிறார்கள்.
தொழிற்சங்க தலைவர்கள் போராட்டம் அறிவிக்கிறார்கள். அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்திருக்கிறோம்.கேட்ட அனைத்தும் வழங்கிய பின்னரும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் என்று சொல்கின்றனர்.
போக்குவரத்து ஊழியர்களின் கேட்ட பணம் கொடுக்கப்பட்டுள்ளது. 20% சதவிகித போனஸ் வழங்கப்பட்டிருக்கிறது. ரூ.45 கோடி முன்பணம் வழங்கப்பட்டிருகிறது.
4 தினங்களில் விடுமுறையாக இருப்பதால் நெரிசல் இல்லாமல் மக்கள் வெளியூர் செல்கின்றனர். ஆம்னி பேருந்துகளில் முன்பைவிட கூட்டம் குறைவாகதான் இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
dinasuvadu.com