வேலூரில் 3வது முறையாக நில அதிர்வு – மக்கள் அச்சம்!
வேலூர் மாவட்டத்தில் மூன்றாவது முறையாக நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பேரணாம்பட்டுவில் இன்று காலை 9.30 மணி அளவில் அடுத்தடுத்து 2 முறை லேசான நில அதிர்வை உணர்ந்ததாக மக்கள் தகவல் தெரிவிக்கின்றன. சுமார் 3 வினாடிகள் நில அதிர்வு நீடித்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்ததாக தகவல் கூறப்படுகிறது.
ஏற்கனவே பேரணாம்பட்டு சுற்று வட்டாரத்தில் கடந்த நவம்பர் 29 மற்றும் டிசம்பர் 23ல் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில், மீண்டும் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.