டிச.3ம் தேதி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை.!

டிச.3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Kanniyakumari

கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.

அந்த விடுமுறைக்கு ஈடாக (14.12.2024) அன்று வேலை நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டாறு தலைமை ஆலயமாக இந்த ஆலயம் விளங்குகிறது. 1544-ல் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கிறித்தவ மதத்தை பரப்ப வந்த புனித சவேரியாரால் இவ் ஆலயம் சிறிப அளவில் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்