இன்றைக்கு 3-வது பலி.. உதயநிதி ஸ்டாலின் ட்விட் .!

நாளை கொரோனா மத்தியிலும் நீட் தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில், நீட் தேர்வு பயத்தால் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மோதிலால் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஏற்கனவே தமிழகத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நீட் கொடுமைக்கு திருச்செங்கோடு மோதிலால் இன்றைக்கு 3-வது பலி. ‘முயன்றோம்; முடியல’ என அடிமைகள் கைவிரித்தது முதலே தற்கொலைகள் அதிகமாகின்றன. காலைப்பிடித்து கமிஷன் அடிப்பதற்கு பதிலாக சட்டையைப்பிடித்து நீட் வேண்டாம் என்றிருந்தால் நம் பிள்ளைகள் உயிர் போயிருக்காது என பதிவிட்டுள்ளார்.
நீட் கொடுமைக்கு திருச்செங்கோடு மோதிலால் இன்றைக்கு 3-வது பலி.
‘முயன்றோம்; முடியல’ என அடிமைகள் கைவிரித்தது முதலே தற்கொலைகள் அதிகமாகின்றன. காலைப்பிடித்து கமிஷன் அடிப்பதற்கு பதிலாக சட்டையைப்பிடித்து நீட் வேண்டாம் என்றிருந்தால் நம் பிள்ளைகள் உயிர் போயிருக்காது.#BanNEET_SaveTNStudent— Udhay (@Udhaystalin) September 12, 2020