தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இப்போது இல்லை: ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறும் தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 24 முதல் உள்ளாட்சி பொறுப்புகள் காலியாக இருக்கிறது. கடந்த முறை அதிமுக ஆட்சி அமைத்ததில் இருந்து தற்போது வரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இதன் காரணமாக பணிகள் மெத்தனமாக நடந்து வருவதால் பொதுமக்கள் வெகுவாக சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த மூன்று வருடங்களாக வழக்கு நடைபெற்று வருகிறது. அவ்வப்போது மீண்டும் மீண்டும் ஆளும்கட்சியின் இசைவிற்கு ஏற்றாற்போல் உள்ளாட்சி தேர்தலின் கால அவகாசத்தை அதிகரித்துக்கொண்டே வந்தது தேர்தல் ஆணையம்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது தமிழக தேர்தல் ஆணையம் . அதில் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த இன்னும் மூன்று மாத காலம் அவகாசம் தேவை என கேட்டுள்ளது. மூன்று வருடங்களாக தேர்தல் நடத்தாமல் ஆளுங்கட்சியின் கைப்பாவையை போன்று செயல்பட்டு வருகிறது தமிழக தேர்தல் ஆணையம்.